Site icon Tamil News

மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் நாடு திரும்பியுள்ளனர்

இலங்கை அரசாங்கம் மியான்மர் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு மியான்மரில் சிக்கித் தவித்த ஆறு இலங்கையர்கள் மியான்மர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு, இலங்கைக்குத் திரும்புவதற்காக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கிவரும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட ஆறு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் 25 மே 2023 அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பாங்காக் வழியாக கொழும்புக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பப்பட்டதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், தூதுவர் ஜனக பண்டார மற்றும் யாங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு மீட்டு அனுப்பும் செயல்முறையை ஒருங்கிணைத்தனர்.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் ஈடன் மியான்மர் அறக்கட்டளை ஆகியவை திருப்பி அனுப்பப்படுவதற்கு உதவியது மற்றும் உதவி செய்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version