Site icon Tamil News

ஜப்பானில் 10 நிமிடங்களில் 2 முறை உலுக்கிய நிலநடுக்கங்கள்…!

ஜப்பானில் 10 நிமிடங்களில் 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

மத்திய ஜப்பானை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இன்று காலை ஜப்பானிய நேரப்படி 6.31 மணிக்கு நோட்டோ (Noto) தீபகற்பத்தில் நிகநடுக்கம் ஏற்பட்டது.

10 நிமிடம் கழித்து அதே இடத்தில் 4.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. உடனடிச் சேதம் குறித்துத் தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட வட்டாரத்தில் இருக்கும் Kashiwazaki-Kariwa அணு ஆலையில் சேதத்தைச் சரிபார்க்க செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக NHK செய்தி நிறுவனம் கூறியது.

ஜனவரி 1ஆம் தேதி நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 230க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன் விளைவாக பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என்று NHK எச்சரித்தது

Exit mobile version