Site icon Tamil News

தண்ணிமுறிப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 46 மீனவர்கள் விடுதலை

தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் சார்பாக தோன்றிய சட்டத்தரணி அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மன்றுக்கு வழங்கியிருந்தார். அதன்பின்னர் நீதிபதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

Exit mobile version