Site icon Tamil News

ஒரு வாரத்தில் 400 சிகரெட் : பிரித்தானியாவில் 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பொதுவாக மேலைத்தேய நாடுகளில் vapes எனப்படும் இ-சிகரெட் பாதிப்பில்லாதது என அறியப்படுகிறது.

ஆகையால் அதன் விளைவை பொருட்படுத்தாத பல இளையர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவில் 17 வயதான சிறுமி ஒருவர் vapes எடுத்துக்கொண்டுள்ளார்.

சரியாக வாரத்திற்கு 400 இ-சிகரெட்டுக்களை பாவித்துள்ளார். இதனால் அவருடைய நுரையீரல் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

அவருடைய நுரையீரலில் பெரிய அளவிலான துளை ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நுரையீரல் அகற்றப்பட்டுள்ளது.

கைலா வாப்பிங் செய்யத் தொடங்கியபோது அவருக்கு வயது 15, மேலும் ஒவ்வொரு வாரமும் 4000 சிகரெட்டுகளுக்கு நிகோடின் சமமான 4,000 பஃப் வேப்பைப் பெறுவார் என்றும் அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

Exit mobile version