Site icon Tamil News

புத்தாண்டில் அதி உச்ச பாதுகாப்பில் பிரான்ஸ் : உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்!

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி பிரான்ஸ் முழுவதும்,   90,000 சட்ட அமலாக்க அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று உள்நாட்டு உளவுத்துறை தலைவர் செலின் பெர்தான் தெரிவித்துள்ளார்.

அவர்களில், 6,000 பேர் பாரிஸில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அங்கு  1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Champs-Elysees இல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்  மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய Darmanin, “மிக உயர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல்” என்று மேற்கோள் காட்டினார்.

பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக ட்ரோன்களை முதன்முறையாக போலீசார் பயன்படுத்த முடியும் என்றும், பல்லாயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களுடன் கூடுதலாக  5,000 வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என  டார்மானின் கூறியுள்ளார்.

பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளை மையமாகக் கொண்டிருக்கும், இதில் டிஜே செட்கள், வானவேடிக்கைகள் மற்றும் ஆர்க் டி ட்ரையம்ஃபில் வீடியோ ப்ரொஜெக்ஷன்கள் ஆகியவை பிரதானமாக இருக்கும். இதை காண பல்லாயிரம் பேர் ஒன்றுக்கூடுவர்.

ஆகவே இந்த சந்தர்ப்பங்கள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சமும், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version