Site icon Tamil News

தென்னாபிரிக்காவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம் – பலியான 31 பேர்

தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 18ம் திகதி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ப்ரீஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தின் செயல்பாடு கடந்த 1990களில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த கனிம வளங்கள் தீா்ந்துவிட்டதால் அது மூடப்பட்டது. இந்த சுரங்கத்தில் அவ்வப்போது சட்டவிரோதமாக கனிம படிவங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுரங்கப் பணியின் போது எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்தினால் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version