Tamil News

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூத்த தளபதிகள் ஐவர் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

அதேவேளை, ஹமாஸ் போன்று இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் பல ஆயுத குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுத குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதுகிறது. இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

Five senior Gaza commanders killed by Israeli forces; rocket strikes cause first death in Israel - India Today

இதனிடையே, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் ( 45) கடந்த 2ம் திகதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தன்னை இஸ்ரேல் படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறிகடந்த 86 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காதர் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து, காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவை குறிவைத்து கடந்த செவ்வாய்கிழமை முதல் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 90 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் காசா முனையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் மூத்த தளபதிகள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் ராக்கெட் தாக்குதல் பிரிவு தளபதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version