Site icon Tamil News

முதல் முறை வீடு வாங்குவோருக்கு 25,000 அமெரிக்க டொலர் உதவி: கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமது பொருளாதர கொள்கையின் ஓர் அம்சமாக முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு அமெரிக்க டொலர் 25,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை முன்மொழிவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஏறுமுகமாக உள்ள வீட்டு விலைகளால் அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளது தமக்கு மிகப் பெரிய அரசியல் சவால்களில் ஒன்றாக விளங்குவதை இதன் மூலம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது இத் திட்டத்தின்படி, தாங்கள் குடியிருக்கும் வீட்டு வாடகையை குறித்த நேரத்தில் ஈராண்டுகளுக்கு கட்டும் முதல் முறை வீடு வாங்க எண்ணுவோர்கள், இந்த வீடு வாங்கத் தேவைப்படும் வைப்புத் தொகை ஆதரவு பெற தகுதியுடையவர் ஆவர். இதைத் ஹாரிஸ் வியாழக்கிழமை அன்று தமது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, அதிபர் ஜோ பைடன் அதிபர் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு தாம் ஆற்றிய நாட்டு நடப்பு உரையில், முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு அமெரிக்க டொலர் 10,000 வரிச் சலுகையாக வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அத்துடன், சொந்த வீடில்லாதவர்களின் பிள்ளைகளுக்கு மேலும் சலுகைகள் பெறும் திட்டத்தையும் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

பைடன் அறிவித்த மேற்கண்ட திட்டத்தின் பரந்த விரிவாக்கம் என ஹாரிசின் திட்டம் வர்ணிக்கப்படுகிறது.

ஹாரிஸ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் திகதி) அன்று வட கேரொலினா மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பேரணியில் தமது மற்ற பொருறாதார திட்டங்களுடன் இந்த வீட்டுத் திட்டம் குறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைடனின் வரிச் சலுகை, திருவாட்டி ஹாரிசின் நிறுவன வீட்டு உரிமையாளர்கள் தரவு நிறுவனங்களைப் பயன்படுத்தி வீட்டு விலைகளை அதிகரிப்பது, கணிசமான வாடகை வீடுகளை வாங்கும் நிலச் சொத்து முகவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகளை குறைப்பது ஆகிய திட்டங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version