Site icon Tamil News

பேருந்து விபத்தில் சிக்கி 21 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாதுக்க – துன்னான பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன் பின்னால் வருகை தந்த பேருந்து மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இமுன்னெடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version