Site icon Tamil News

வவுனியாவில் இன்று காலை நடந்த சோகம் – தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு

வவுனியா கண்ணாட்டி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள்.

இன்றைய தினம் காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு சிறுவன் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது டிப்பர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version