Site icon Tamil News

நைஜீரியாவில் எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் தீப்பரவல்: இரு குழந்தைகள் உட்பட 34 பேர் பலி!

நைஜீரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள பெனினில் எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

“துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகள் உட்பட 34 பேர் இறந்துள்ளனர்.

மேலும் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் சேகரிப்பு நிலையத்தை சூழவுள்ள பிரதேசங்களில் பல தீப்பிழம்புகள் வெடித்ததாகவும் அதனை தொடர்ந்து கரும்புகை அதிக அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய ரீதியாக நைஜீரியா அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டில் இருந்து எரிப்பொருட்களை சட்டவிரோதமாக மக்கள் கடத்தி சென்று விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக எரிபொருட்களை கடத்தல்காரர்கள் எல்லை தாண்டி ஏனைய அயல் நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.

உரிய பாதுகாப்பினை அவர்கள் பேண தவறுவதனால் தீப்பரவல்கள் அதிக அளவில் இடம்பெறுகின்றன.

Exit mobile version