Site icon Tamil News

இலங்கையில் மூடப்பட்ட 12 மெக்டொனால்டு விற்பனை நிலையங்கள்: வெளியான காரணம்

McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திவயின செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் தாய் நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையில் உள்ள அதன் உள்ளூர் பங்காளியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது மற்றும் நாட்டில் உள்ள அனைத்து 12 விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று அமெரிக்க நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

“நிலையான சிக்கல்கள் காரணமாக உரிமையாளருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தாய் நிறுவனம் முடிவு செய்தது” என்று மெக்டொனால்டின் வழக்கறிஞர் சனத் விஜேவர்தன கூறியுள்ளார்.

புதன்கிழமை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆனால் கடைகள் சில நாட்களாக தொடர்ந்து இயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version