Site icon Tamil News

இலங்கை முழுவதும் 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேரை காணவில்லை

நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி மடத்தில் பணிபுரிந்த 14 மற்றும் 15 வயதுடைய பிக்கு சிறுவர்கள் இருவர், பிபில பிரதேசத்தில் உள்ள பெண்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமிகள் இருவர், கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.

இந்த 2 பெண்களும் உள்ளூர் பாடசாலை ஒன்றில் 11 வகுப்பில் படித்த இரு மாணவிகளாவர்.

இந்த 2 மாணவிகளும் வகுப்பறையில் புத்தகப் பைகளுடன் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அன்றைய தினம் அவர்கள் இல்லத்திற்கு வராததால், இது குறித்து பிபில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, வெலிமடை, அம்பேகமுவ பிரதேசத்தில் உள்ள 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் காணாமல் போயுள்ளதாக மாணவியின் பெற்றோர் காணவில்லை என ஊவா பரணகம பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், பெயகம, பேராதனை வீதியைச் சேர்ந்த 23 வயதான ஹோட்டல் தொழிலாளி, கிருலப்பன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சாரதி, கந்தளேயைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் மற்றும் எரகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணம் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் இந்த காணாமல் போன குழுவைச் சேர்ந்தவர்களாகும்.

Exit mobile version