Site icon Tamil News

பிரித்தானியாவில் போர் விமானத்தைச் செலுத்தி அசத்தும் 102 வயதுடைய நபர்

பிரித்தானியாவில் 102 வயது Jack Hemmings என்ற நபர் போர் விமானத்தைச் செலுத்தி நிதி திரட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் அரச விமான படையைச் சேர்ந்த விமானியான Jack இப்போது போர் விமானத்தைச் செலுத்தும் மிக வயதானவர் என்ற பெருமைக்குரியவராகியுள்ளார்.

100 வயதுக்கு மேற்பட்ட, துடிப்பான சாகசப் பிரியரான அவர் இதைச் சுமையாகப் பார்க்காமல் சுகமாக விரும்பிச் செய்தார்.

Jack போர் விமானத்தைச் செலுத்துவது இது முதல் முறையல்ல. 19 வயதில் அவர் அரச விமான படையில் சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகளுக்கு எதிராக Lockheed Hudsons ரக விமானத்தை அவர் இயக்கியிருந்தார்.

Exit mobile version