Site icon Tamil News

சிகரெட் மற்றும் மது பாவனையால் நாளாந்தம் 100 கோடி இழப்பு

சிகரெட், சாராயம், பீர் போன்றவற்றிற்காக தினமும் 100 கோடி ரூபாய் அழிகிறது என்று அறிவியல் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

வயது வந்த ஆண்களில் 30.2% பேர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று அதன் நிர்வாக இயக்குனர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.

அந்த மக்கள் நாளாந்தம் புகைக்கும் சிகரெட்டுகளினால் மொத்தமாக 40 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மது மற்றும் சிகரெட் பாவனையால் தினமும் சுமார் 80 பேர் உயிரிழப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், வரி வருவாயை விட அதிகமான பணம் நோய்வாய்ப்பட்ட உயிர்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version