Site icon Tamil News

மியன்மாரில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் உயிரிழப்பு!

மியன்மாரில் அந்நாட்டு  அரச படையினர் இன்று நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் குறைந்தப்பட்டசம் 15 பெண்களும், சிறார்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

சாகெய்ங் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிராந்தியம் மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து வருகிறது.

அங்குள்ள மக்கள் தமது சொந்த ஆயுதக்குழுக்களை ஸ்தாபித்துள்ளதுடன்,  சுயமாக பாடசாலைகள் மற்றும் மருத்துவநிலையங்களையும் நடத்துகின்றனர்.

இந்நிலையில் இன்று  காலை இராணுவ விமானமொன்றில் இருந்து குண்டுகள் வீசப்பட்டதாவும், பின்னர் ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிபிசியிடம் கிராமவாசி  ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பாதுகாப்புப் படைகள் எனும் கிளர்ச்சிக்குழுவின் புதிய அலுவலகத்  திறப்பு வைபவத்தின்போது  இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version