Site icon Tamil News

மின்கட்டணம் குறித்து நாடாளுமன்றத்தில் அரங்கேறிய வாக்குவாதம் !

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியில்லாமல் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சஜித் பிரேமதாகச எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அதிகாரிகளின் ஆதரவுடனேயே மின்சார கட்டணத்தை அதிகரித்திருந்தாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த ஆணைக்குழுவின் எதிர்பாக அதனை கருத முடியாது என்றும் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ஒரு உறுப்பினர் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவாக ஒருபோதும் மாற முடியாது என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.அதில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளதாகவும் அதில் மூன்று பேரின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்டணத்தை உயர்த்தாமல் தொடர்ச்சியான மின்னசாரத்தை வழங்கமுடியாதென அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்துவந்திருந்தாகவும் மின்வெட்டினை அமுல்படுத்திய போது தொடர்சியாக மின்சாரத்தை வழங்குமாறு எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் செய்திருந்தாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

Exit mobile version