Site icon Tamil News

மது அருந்தாமலேயே போதை..அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்!

அமெரிக்காவில் முன்னாள் ஆசிரியர் ஒருவர், மது அருந்தாமலேயே போதையானது போல் காட்டும் அரிய வகை நோயால், தனது வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பாடசாலை ஆசிரியர் மார்க் மோங்கியார்டோ (40). இவர் Auto-Brewery Syndrome எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதாவது அவரது குடலில் உள்ள நுண்ணுயிரிகள், உடலில் உள்ள சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்றும். இதனால் அவர் மது அருந்தாவிட்டாலும் போதையில் இருப்பது போல் தோன்றும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டதால் 2019ஆம் ஆண்டில், ஆறு மாதங்களில் இருமுறை மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக மார்க் குற்றம்சாட்டப்பட்டார்.இதுபோல் அவர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக தனது மனைவி, பல ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கத்தை மறைப்பதாக சந்தேகப்பட்டதாக கூறியுள்ளார் மார்க்.ஏனெனில், தன்னிடம் மந்தமான பேச்சு முதல் சமநிலை சிக்கல் ஆகிய போதை அறிகுறிகள் தென்பட்டதால் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க் முதல் முறையாக 2005ம் ஆண்டு இந்த பிரச்சனையால் பாடசாலையில் தண்டனை பெற்றுள்ளார். 2018ம் ஆண்டில் தடகள இயக்குநரான மார்க், பணிக்கு சேர்ந்த மூன்று வாரங்களில் பொலிஸாரால் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.அரியவகை நோயால் சந்தித்த பிரச்சனைகள் குறித்து அவர் கூறுகையில், நான் எனது வீட்டை விற்க வேண்டியிருந்தது. எனது காரை விற்க வேண்டியிருந்தது. எனக்கு கல்வியில் வேலை கிடைக்கவில்லை. மளிகை கடையில் வேலை கிடைக்கவில்லை. என்னிடம் நிலுவையில் குற்ற வழக்குகள் இருந்தன.

நான் மது அருந்தாமல் இருந்தபோது இரண்டு முறை சிறைவாசம் அனுபவித்தேன். நான் இத்தாலிய-அமெரிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். 2019ம் ஆண்டு மே மாதத்தில் இது கண்டறியப்பட்டதில் இருந்து நான் பாஸ்தா அல்லது பீட்சா அல்லது அதுபோன்ற எந்த உணவையும் உட்கொள்ளவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.மோங்கியார்டோ தனது நிலையைக் கையாள, ஒரு நாளைக்கு 30 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், கார்ப் டயட்டில் வாழ்வதாகவும் கூறுகிறார்.

அத்துடன் எப்போதும் வாகனம் ஓட்டுவதற்கு முன் Breathalyzer பரிசோதனையை மேற்கொள்கிறார். அமெரிக்காவில் எத்தனை அமெரிக்கர்களுக்கு இந்த நிலை உள்ளது என்பதற்கான உறுதியான மதிப்பீடுகள் எதுவும் இல்லை.ஆனால், மருத்துவ இலக்கியங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version