Tamil News

பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பிரான்ஸின் பெண் மந்திரி

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் பிளேபாய் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா(40) போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் கொடுப்பார்கள். ஆனால், மார்லின் ஷியாப்பா அப்படிச் செய்யாமல், டிசன்டாகவே போஸ் கொடுத்திருந்தார்.

இருப்பினும், மந்திரி ஒருவர் வயது வந்தோர் இதழுக்கு எப்படி போஸ் கொடுக்கலாம் என்று சர்ச்சை எழுந்து உள்ளது. பெண்கள், ஓரினச்சேர்க்கை உரிமைகள், கருக்கலைப்பு ஆகியவை குறித்து பிளேபாய் இதழுக்கு 12 பக்க பேட்டியுடன் மார்லின் போஸ் கொடுத்து உள்ளார்.

2017 முதல் பிரான்ஸ் அரசில் அங்கம் வகித்து வரும் மார்லின் சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை. இருப்பினும், அவரது இந்த செயல் அரசில் இருக்கும் வலதுசாரிகளை கோபப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரதமர் தொடங்கிப் பல வலதுசாரிகளும் அவர் தவறு செய்துவிட்டதாகக் கருதுகின்றனர்.

இருப்பினும், தான் செய்தது சரி என்றே மார்லின் கூறி வருகிறார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில், பெண்கள் தங்கள் உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களின் உரிமை. அதற்காக எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் குரல் கொடுப்பேன். பிரான்சில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். அது பிற்போக்குவாதிகளைக் கோபப்படுத்துவதாக இருக்கிறது என்றார்.

பிளேபாய் இதழும் தாங்கள் செய்தது தவறில்லை என்று விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து வெளீயிடப்பட்டு உள்ள அறிக்கையில் மார்லின் பெண்களின் உரிமைகளைப் பேசியுள்ளார். மேலும், எங்கள் பத்திரிக்கை ஆண்களுக்கான பத்திரிகை மட்டுமில்லை. பெண்ணிய நோக்கத்திற்கான ஒரு கருவி என்பதை அவர் புரிந்துகொண்டார். பிளேபாய் ஒரு ஆபாச இதழ் இல்லை. அது 300 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் மற்றும் பத்திரிகையின் கலவை. அது அறிவுசார் புத்தகம் என்று கூறி உள்ளது.

 

Exit mobile version