Tamil News

பிரித்தானியாவில் செல்லப்பிராணிகள் மூலம் பரவும் அரியவகை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!

பிரித்தானியாவில் பூனைகள் மூலம் பரவும் அபூர்வ நோய் ஒன்றைக் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் முதன்முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்குமுன், தென் அமெரிக்காவுக்கு வெளியே வேறெங்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதில்லை.ஆனால், இப்போதோ, பிரித்தானியாவில் மூன்று பேருக்கு பூனையிடமிருந்து பரவும் இந்த பூஞ்சை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Sporotrichosis brasiliensis என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சைத் தொற்று உடலின்மீது கொப்புளங்களையும் புண்களையும் உருவாக்கும்.பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய், பாதிக்கப்பட்ட பூனையின் கீறல், அல்லது பூனைக்கடி மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும்.

 

பிரேசில் நாட்டில் இந்த கிருமி அதிகம் காணப்படும் நிலையில், பிரேசிலிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு வரப்பட்ட பூனை ஒன்றை வைத்திருக்கும் 64 வயது பெண் ஒருவர், அவரது மகளான 30 வயது பெண் ஒருவர் மற்றும் 20 வயதுகளிலிருக்கும் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆகிய மூவருக்கு இந்த நோய் பரவியுள்ளது.ஒரே பூனையிடமிருந்து இந்த நோய் அந்த மூவருக்கும் பரவியுள்ளது.

இந்த பூஞ்சைத் தொற்று பொதுவாக மிதமானதாக காணப்பட்டாலும், எலும்புகளையும் மூட்டுகளையும் கூட பாதிக்கலாம்.மேலும், சிலருக்கு நுரையீரல்கள் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version