Site icon Tamil News

பிரித்தானியாவில் அதிசய குழந்தை – ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் 22 வாரங்களில் பிறந்து பல சிகிச்சைகளுக்குப் பின்னர் உயிர் பிழைத்த இமொஜன் (Imogen) என்ற குழந்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இமொஜன் பிரித்தானியாவில் சுவான்சீஸ் சிங்கல்டன் (Swanseas Singleton) மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி பிறந்தார்.

அப்போது குழந்தையின் எடை சுமார் 500 கிராம் மாத்திரமே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை மருத்துவமனையில் 132 நாள்கள் வைத்துக் கண்ணுங்கருத்துமாகப் மருத்துவர்கள் பார்த்துக்கொண்டனர்.

தற்போது 6 மாதக் குழந்தையாக இருக்கும் இமொஜன் அண்மையில்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இமொஜன் பல சிக்கல்களைக் கடந்து வந்துள்ளார். அதை நினைத்துப் பார்க்கவே என்னால் முடியவில்லை, என அவரது தாயார் ரேச்சல் கூறினார்.

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்ற உதவிய மருத்துவர்களுக்கும் தாதியருக்கும் தாயார் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அவர்களது உதவியின்றி எங்களால் இந்த நிலையை அடைந்திருக்க வாய்ப்பில்லை, என  ரேச்சல் கூறினார்.

Exit mobile version