Site icon Tamil News

பிரான்ஸ் ஜனாதிபதி – பிரதமரின் பரிதாப நிலை

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Élisabeth Borne ஆகியோரின் பிரபலத்தன்மை பாரிய வீழ்ச்சியை சந்தித்து பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளனர்.

ஓய்வூதிய சீர்திருத்தம் நாடளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவர்களது பிரபலத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதென Elabe Poll நிறுவனம் மேற்கொண்டுள்ள  கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சென்ற மாதத்துடன் ஒப்பிடுகையில் 7 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்து.

அவரது பிரபலத்தன்மை தற்போது 25% வீதமாக உள்ளது.

அதேவேளை, பிரதமர் Élisabeth Borne இன் செல்வாக்கு தற்போது 22% வீதமாக உள்ளது. அவர் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து முதன்முறையாக மிக மோசமான பிரபலத்தன்மையை சந்தித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட 1,000 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர்.

Exit mobile version