Site icon Tamil News

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார்

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தை சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னர் கட்டியதாக வரலாறு இந்த கோவிலுக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக தினசரி வந்து செல்கின்றனர்.

இந்த சூழலில் இன்று ஆலங்குடி அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் கும்பாபிஷேகம் பராமரிப்பு பணி யாகசாலை அமைக்கும் பணி குளத்தை தூர்வாரும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

அத்தோடு கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் அதிகாரிகளுக்கும், கோவில் நிர்வாகக் குழுவினரிக்கும் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது ஆலங்குடி பேரூராட்சித் தலைவர், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version