Site icon Tamil News

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட  விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1846 ஆம் ஆண்டு  அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உச்சவ காலங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம் அப்படி இருக்கின்ற போது இப்பொழுது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி திருவம்பாவை தினத்திற்கு சென்ற பொழுது முருகன் சிலை காணாமல் போயிருந்தது

வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?

இதற்கும் இராணுவத்திற்கும்  தொடர்பு இருப்பதாகவும் தான் சந்தேகப்பதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version