Site icon Tamil News

நியூசிலாந்தை 7.1ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு !

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நியூசிலாந்து ஊடகங்களில் உள்ள அறிக்கைகள், பிராந்தியத்தில் தொடர்புடைய மீட்பு நடவடிக்கைகளை வெளியிட பரிந்துரைக்கின்றன.

எனினும், அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முன்னதாக மார்ச் 4ஆம் திகதி, கெர்மடெக் தீவுகளில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ஆழம் 152 கிலோ மீற்றர் என பதிவானதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்தது.

உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் அவுஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Exit mobile version