Site icon Tamil News

நாமல் ஒரு புரொய்லர் கோழி; விமல் வீரவன்ஸ கடும் விமர்சனம்!

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,மக்கள் துன்பப்படும் வேளையில் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், நாமல் ராஜபக்ச  ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி இதுவரை எதையும் கற்றுக்கொள்ளவில்லை எனவும் விமல் கூறினார்.

அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார் என்றும் காலத்துக்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழி என்றும் நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த விடயங்களே காரணமாகும் எனவும் அவர் சாடினார்.

கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டிருந்த நிலையில், , டலஸ் அழகப்பெருமவே அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version