Site icon Tamil News

நான்கு வருடங்களில் பின் சஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 04 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட சஹரன் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று (15) விடுதலை செய்யப்பட்டார்.

25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்குமாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவியான சாரா ஜஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்திரன், பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களை வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version