Site icon Tamil News

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் ஒன்றினையுமாறு சந்திரிக்கா அழைப்பு!

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எனது ஆட்சி காலத்தில் ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாத்திரமே கடன் பெறப்பட்டது. ஆனால் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சீனாவிடமிருந்து 9 சதவீத வட்டிக்கு கடன் பெறப்பட்டது.

மோசடி செய்வதற்காகவே அவர்கள் இவ்வாறு கடன் பெற்றனர். இவ்வாறு இவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாமல் இன்று நாம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றோம்.

இறுதியில் அரசாங்கமே தம்மை வங்குரோத்தடைந்த நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. உலகில் தாம் வங்குரோத்தடைந்துள்ளதாக அறிவித்துள்ள மிகக்குறைவான நாடுகளில்இலங்கையும் ஒரு நாடாக இடம்பிடித்துள்ளது.

இந்த வீழ்ச்சியை முற்றாக சரி செய்வதற்கு 25 – 30 ஆண்டுகளாவது செல்லும். எனவே குறைந்தபட்சம் இப்போதிருந்தாவது நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version