Site icon Tamil News

தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது.

தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 67 ரன்களை குவித்தார்.ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். அப்துல் சமத் 21 பந்தில் 28 ரன்களை சேர்த்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ், பிலிப் சால்ட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். 2வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில் சால்ட் 59 ரன்னில் அவுட்டானார்.

மனீஷ் பாண்டே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 63 ரன்னிலும், பிரியம் கார்க் 12 ரன்னிலும், சர்ப்ராஸ் கான் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், டெல்லி அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இதன்மூலம் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3வது வெற்றியைப் பதிவு செய்தது.

Exit mobile version