Site icon Tamil News

தைவான் மீது சீனா ஏவுகணை தாக்குல்; மாதிரி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சீன ஊடகம்!(வீடியோ)

சுதந்திர தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என உரிமை கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், தைவான் அமெரிக்காவுடனான நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் வலுவான ஆதரவு வேண்டி, தைவான் அதிபர் சாய் இங்-வென் கலிபோர்னியாவில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி-யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தைவானின் இந்த செயல் சீனாவுக்கு ஆத்திரமூட்டிய நிலையில், தைவான் ஜலசந்தி பகுதியை சுற்றி ஏப்ரல் 8 முதல் 10ம் திகதி வரை சீனா மூன்று நாள் ராணுவ போர் ஒத்திகையை நடத்தி வருகிறது.

இரண்டாவது நாள் ஒத்திகையின் போது தைவானை நோக்கி சீனா டஜன் கணக்கான போர் விமானங்கள் மற்றும் எட்டு போர் கப்பல்களை அனுப்பி வைத்தது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தைவான் மீதான மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் குறித்த மாதிரி காட்சிகளை சீன ஊடகம் ஒன்று வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version