Site icon Tamil News

துருக்கியில் 110 குர்தியர்கள் கைது!

துருக்கிய படையினர் 110 குர்தியர்களை இன்று கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்,  ஊடகவியலாளர்கள்,  சட்டத்தரணிகள் ஆகியோர் இவர்களில் அடங்கியுள்ளனர்.

துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

21 மாகாணங்களில் ஏக காலத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு முற்றுகைகளில் இவர்கள் கைதாகியள்ளனர் என துருக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குர்திஷ் தொழிலாளர்; கட்சிக்கு (பிகேகே) நிதி அளித்தவர்கள்,  அல்லது புதிய அங்கத்தவர்களை சேர்த்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் கூடுதல் சுயாட்சி கோரி ஆயுதப் போராட்டம் நடத்தும் குர்திஷ் தொழிலாளர் கட்சியை பயங்கரவாத அமைப்பாக துருக்கிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது

Exit mobile version