Site icon Tamil News

தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா : 11 பொதுமக்கள் கொல்லப்பட்தாக அறிவிப்பு!

A medical worker walks near a burned car after Russian military strike, as Russia's invasion of Ukraine continues, in central Kyiv, Ukraine October 10, 2022. REUTERS/Gleb Garanich

தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா : 11 பொதுமக்கள் கொல்லப்பட்தாக அறிவிப்பு!

ரஷ்யா – உக்ரைன் போரில் கடந்த இரண்டு நாட்களாக ரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலின்போது ரஷ்யா உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து 80 நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் தற்காலிகமாக சக்தியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர். அதேபோல் புதுபிக்கப்பட்ட தகவல்களின் படி வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version