Site icon Tamil News

தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் பாரிய ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை கண்டித்தும், அரசின் தவறான மோட்டார் வாகன கொள்கைகளை கண்டித்தும் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள்  சார்பில் நாடு முழுவதும் நேற்று சுங்கச்சாவடிகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் ஒரு சில பகுதிகளாக சென்னை மாத்தூர் மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி பகுதிகளில் இந்த போராட்டமானது  நடைபெற்றது

நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதைக் கண்டித்து,  தமிழகம் முழுவதும் லொரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், இதில், 15 சுங்கச்சாவடிகளில்  முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

தற்போது, சுங்கக்கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்திலுள்ள மணல் லொரி, டேங்கர்லொரி மற்றும் சரக்குப் போக்குவரத்து லொரி உள்ளிட்ட அனைத்து லொரி சங்கத்தினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Exit mobile version