Site icon Tamil News

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படும் பௌத்த குடியேற்றங்கள் : மோசமான விளைவுகள் ஏற்படும் என கஜேந்திர குமார் எச்சரிக்கை!

யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகம் இராணுவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றமை எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நேற்று கூடிய நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும்.

நாங்கள் பௌத்தத்திற்கும்,சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல,நயினைதீவு,கிளிநொச்சியில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,விடுதலை புலிகள் அமைப்பு காலத்தில் கூட இந்த விகாரைகள் இருந்தன,போராளிகளினால் எவ்வித பாதிப்பும் பௌத்த விகாரைகளுக்கு ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் யுத்தத்தின் பின்னர் தமிழரின் தாயகம்  இராணுவத்தின் துணை ஊடாக திட்டமிட்டு அழிக்கப்படுகிறது எனக் கூறினார்.

Exit mobile version