Site icon Tamil News

டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை..அவரது கைது வன்முறையைத் தூண்டும் – நடிகை ஸ்டோர்மி பரபரப்பு பேட்டி

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை என அவரது முன்னாள் காதலியும், பிரபல நடிகையுமான ஸ்டோர்மி டேனியல்ஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்ததாக புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது துஷ்பிரயோக புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்ப்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால் அதன் தாக்கம் தேர்தலில் வெளிப்பட்டது.

இந்த நடிகை விவகாரம் தான் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாச பட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரச்சார நிதிச் சட்டங்களை மீறியதற்காக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்த போது நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அப்போது நடிகைக்கு 27 வயது, டிரம்புக்கு 60 வயது. ஜூலை 2006 இல் கோல்ப் போட்டியின் போது ஸ்டோர்மியும் டிரம்பும் சந்தித்தனர். டிரம்பை சந்தித்தபோது, அவரது மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்தார். பரோன் பிறந்து 4 மாதங்கள்தான் ஆகிறது.   டிரம்பின் மெய்க்காப்பாளர்கள் தன்னை ஒரு புதிய நட்சத்திரத்தின் பென்ட்ஹவுஸில் இரவு உணவிற்கு அழைத்ததாக ஸ்டோர்மி கூறினார். டிரம்புடன் தனக்கு இருந்த உறவு மற்றும் அவரது உடல் தோற்றம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதை ஸ்டோர்மி டேனியல்ஸ் தனது full disclosure புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்தநிலையில் டிரம்ப் குறித்து பிரிட்டிஸ் செய்தி நிறுவனமான தி டைம்ஸ் நாளிதழுக்கு ஸ்டோர்மி டேனியல்ஸ் பேட்டி அளித்துள்ளார்.அதில் கூறும்போது, டொனால்ட் டிரம்பை பார்த்து எனக்கு பயமில்லை. அவரை நிர்வாணமாக பார்த்தவள் நான். எனவே அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது.டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டு, மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியவர். அவர் தற்போது கைது செய்யப்பட்டாலும் அல்லது விளைவு எதுவாக இருந்தாலும், அது வன்முறையை ஏற்படுத்தப் போகிறது எனக்கூறியுள்ளார்.

Exit mobile version