Site icon Tamil News

ஜெர்மனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜெர்மனியில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

ஜெர்மனியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் விளையாட்டுக்கு அடிமையாகின்றவர்கள் அல்லது சூதாட்டத்துக்கு அடிமையாகின்றவர்களின் எண்ணிக்கையே தற்போது அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ஜெர்மனியர்கள் புகைப்பிடிப்பதை விட சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுப்படுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜெர்மனியில் இந்த வருடம் புற்று நோயின் காரணமாக 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் இறக்க கூடும் என்ற அச்சம் எழுந்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவ்வாறு புகை பிடித்தலுக்காக செலவிடப்பட்ட தொகையானது 27.1 பில்லியன்  யுரோவாக இருந்துள்ளது.

2021 உடன் ஒப்பிடும் பொழுது  இது 7.7 சதவீதம் குறைவடைந்து உள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

இதேவேளையில் விற்பனை செய்யப்பட்ட தனி சிகரட்களின் எண்ணிக்கையானது 65.8 பில்லியன் சிகரட்டுக்கள் எனவும் இவற்றுடன்  ஒப்பிடுகையில் தற்போதைய நிலை குறைவடைந்துள்ளதாகவும் புள்ளி விபரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version