Site icon Tamil News

இத்தாலி கடலோர காவல்படை 1,200 புலம்பெயர்ந்தோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது

வட ஆபிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடலை கடக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, இத்தாலிய கடலோர காவல்படை மொத்தம்  கடந்த வார இறுதியில்1,200 பேரை ஏற்றிச் செல்லும் இரண்டு படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

400 பேரை ஏற்றிச் செல்லும் படகுகளில் ஒன்று, தெற்கு இத்தாலியின் கலாப்ரியா கடற்கரையில் உள்ள அயோனியன் கடலில் உள்ளதாகவும், இது முன்னர் மால்டா கடல் பகுதியில் பயணித்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, லிபியாவில் உள்ள டோப்ரூக்கில் இருந்து புறப்பட்ட கப்பல், கடலில்  தத்தளித்துக் கொண்டிருந்ததாக ஆதரவு சேவை தெரிவித்திருந்தது.

அதேபோல் திங்களன்று இத்தாலிய கடலோரக் காவல்படையின் மற்ற மீட்பு நடவடிக்கை சிசிலியில் உள்ள சிராகுசாவிலிருந்து தென்கிழக்கே 120 மைல்களுக்கு மேல் அமைந்துள்ள 800 பேரை ஏற்றிச் செல்லும் மீன்பிடி படகும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Exit mobile version