Site icon Tamil News

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஜெர்மனி நாட்டில் அடிப்படை ஊதியம் 14 யூரோவாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜெர்மனியில் தற்பொழுது அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது.

அதாவது 10ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து இது நடைமுறை அமுலுக்கு வந்து இருக்கின்றது.

இதேவேளையில் நேற்றைய தினம் ஏப்ரல் 10 ஆம் திகதி தொழில் அமைச்சர் ஊபெடர்ஸ் ஐல் அவர்கள் எதிர் வரும் வருடம் அடிப்படை சம்பளமானது மணித்தியாலம் ஒன்றுக்கு 14 யூரோவாக உயர்த்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார்.

இதேவேளையில் இது தொடர்பான ஆலோசனை அமைப்பை தான் வேண்டியுள்ளதாகவும் இந்த ஆலோசனை அமைப்பு எவ்வகையில் இந்த விடயத்தில்  ஆலோசனை வழங்குகின்தோ அதன் அடிப்படையில் எதிர் வரும் வருடம் 14 யுரோ மணித்தியாலத்திற்கு உயர்த்தப்படக் கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

 

Exit mobile version