Site icon Tamil News

செவ்வாய் கிரகத்தின் சுழற்சியின் வேகத்தில் திடீர் மாற்றம் – நாசா வெளியிட்ட காரணம்

இன்சைட் லெண்டரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பியது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த லேண்டர் செவ்வாய் கிரகத்தை சென்று அடைந்து ஆய்வு தொடங்கியது. இந்த திட்டம் எரிசக்தி தீர்ந்ததால் முடிவுக்கு வந்தது.

இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பி வைத்த தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரித்து வருவதாக தெரிய வந்ததுள்ளது.

இந்த பகுப்பாய்வில் செவ்வாய் கிரகத்தில் வேகமாக சுழல்வதன் காரணமாக ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி வினாடி அளவுக்கு குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானிகளால் எந்த காரணத்தினால் சுழற்சி வேகம் அதிகரித்து வருகிறது என முழுமையாக கண்டறியப்பட முடியவில்லை.

சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கு மேற்பரப்பில் நடக்கும் நிகழ்வு, கிரகத்தின் நிறை போன்றவற்றின் மாற்றமாக இருக்கலாம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் தெரிவித்திருப்பதாவது, சமீபத்தில் மிகவும் துல்லியமாக அளவீட்டை பெறுவது நன்றாக உள்ளது.

புவி இயற்பியல் செவ்வாய் கிரகத்துக்கான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Exit mobile version