Site icon Tamil News

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் குழு அடக்கி பரிசுகளை தட்டி சென்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை மேட்டு கொள்ளை திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் குழு அடக்கி பரிசுகளை தட்டி சென்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை மேட்டு கொள்ளை திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் பங்கு பெற்றன.

9 பேர் கொண்ட 10குழுக்களாக வீரர்கள் கலந்து கொண்டனர்.

மைதானத்தின் நடுவில் ஜல்லிக்கட்டு காளை கட்டப்பட்டது காளைகள் சீறி பாய்ந்து சுற்றிவர ர்கள் குழு காளைகளை அடக்கினர் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைக்கும் 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு அதற்குள் வீரர்கள் குழு ஜல்லிக்கட்டு.

காளை அடக்க வேண்டும் வீரர்கள் ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் இல்லையென்றால் ஜல்லிக்கட்டு காளை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் ஜல்லிக்கட்டு.

காளையை வீரர்கள் அடக்கினால் வீரர்கள் குழுவிற்கு பரிசுகள் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மைதானத்தைச் சுற்றி ஜல்லிக்கட்டு காளை சீரிப்பாய்ந்து சுற்றி வந்தது இதனை வீரர்கள் அடக்கினர்.

இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

Exit mobile version