Site icon Tamil News

கொவிட் தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொவிட் 19 பெருந்தெற்று பரவல் சர்வதேச ரீதியில் அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த 2020 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி பிரகடனம் செய்திருந்த நிலையில்இ இந்த அவசர நிலை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவசரநிலை நிறைவுக்குக் கொண்டு வந்ததால்  உலகளாவிய ரீதியில் சுகாதார அச்சுறுத்தலாக கொவிட் 19 நிறைவடைந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைடைந்ததை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version