Site icon Tamil News

கிரைமியாவை கைப்பற்ற முயற்சித்தால் அணுவாயுதத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

கிரைமியா தீபகற்பத்தை கைப்பற்றுவதற்கான உக்ரைனின் எந்தவொரு முயற்சியும் ரஷ்யா எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ரஷ்யா நேட்டோவுடன் நேரடி மோதலில் நுழைய திட்டமிடவில்லை எனக் கூறினார்.

உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கிரெம்ளின் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் மீண்டும் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கு எதிராக எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவது அரசின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது அணுசக்தி தடுப்பு அடிப்படை கோட்பாடால் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version