Site icon Tamil News

கார்ட்டூன் கதாப்பாத்திரம் கட்டளையிட்டதால் மூன்று வயது மகளை கொலை செய்த தாய்..!

அமெரிக்காவில் கார்ட்டூன் கதாபாத்திரம் கட்டளையிட்டதால்  மூன்று வயது மகளை அவரது தாய் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சினை சேர்ந்த ஜஸ்டின் ஜான்சன் என்ற பெண் தனது பிறந்த நாளன்று மூன்று வயது மகளை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.கடந்த செப்டம்பர்16, 2021ல் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சிறுமியான சுட்டன் மோசரின் உடல் ஆஸ்கோடா டவுன்ஷிப்பில் உள்ள அவரது வீட்டில் குப்பை பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜான்சன் தனது மகளை கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டதோடு, குழந்தை துஷ்பிரயோக வழக்கில் பரோல் கிடைக்காமல் ஆயும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குழந்தை துஷ்பிரயோக குற்றத்திற்காக ஜான்சனுக்கு அதிக பட்சமாக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, ஆயுள் தண்டனையுடன் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

மிச்சிகன் குழந்தை பாதுகாப்பு சேவைகள் ஆய்வாளர் ரியான் எபர்லைன் கருத்துப்படி, 23 வயதான ஐஸ்டின் ஜான்சன் தனது மகளைக் கொல்லுமாறு அறிவுறுத்திய ஒரு தொலைக்காட்சி கதாபாத்திரத்தின் மாயத்தோற்றத்தை கண்டுள்ளார்.விசாரணையில், ஜான்சன் டிவியில்  மாயத்தோற்றத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.“SpongeBob என்ற கார்டூன் கதாபாத்திரம் தான் தன் மகளை கொல்ல சொல்லி டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்” என ஜான்சன் ஆய்வாளரிடம் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையின் போது, ​​தனது மகளை கத்தியால் குத்திக் கொல்லும் முன் தன்னைத் தானே கொல்ல முயன்றதாக ஜான்சன் தன்னிடம் கூறியதாக ஆய்வாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.கடந்த திங்களன்று ஐயோஸ்கோ கவுண்டி நீதிமன்றத்தில் தண்டனையின் போது ஜான்சன் தனது மனநலப் போராட்டங்களைப் பற்றி நீதிபதியிடம் கூறியுள்ளார்.ஜான்சன் தனது 13 வயதில் அவர் எல்லைக்குட்பட்ட ஆளுமைக் கோளாறு, இருமுனைக் கோளாறு,  பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஜான்சனின் கூற்றுப்படி, செப்டம்பர் 2021க்குள், அவர் ஒரு வருடமாக பரிந்துரைக்கப்பட்ட மனநல மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் மேலும் நிறைய போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார்.“எனது மகளை கொன்றதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எங்கள் குடும்பத்தைப் பற்றி ஊடகத்தில் யாரும் தவறாக எழுத வேண்டாம்” என ஜான்சன் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version