Site icon Tamil News

ஓம் நமசிவாய வாழ்க

அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி..!

சிராப்பள்ளி –
(திருச்சிராப்பள்ளி)

பாகம்:02
பாடல் எண்: 02/11..!

நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை
எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில்
தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச்
சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!

இதன் பொருள்:

நெரித்தல் – நசுக்குதல்;
மலை எடுக்க நினைத்தவன் – கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
எரிவிடம் – வினைத்தொகை – எரி விடம் – எரிக்கும் விஷம்;
இமையவர் – தேவர்கள்;
தரித்தல் – தாங்குதல்; பொறுத்தல்; அணிதல்;
சடையினதி – சடையில் நதி – கங்கை;
தடுத்தல் – அடைத்தல்; தடை செய்தல்; நிறுத்திவைத்தல்; அடக்குதல்;

“பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயமே”

ஈசனை தேடி…
எனது பயணங்கள்

நாளையும் தொடரும்..!

ஓம் நமசிவாய

Exit mobile version