Site icon Tamil News

ஐரோப்பா செல்ல முயன்று கடலில் தத்தளித்த 440 புகலிட கோரிக்கையாளர்களில் இலங்கையர்கள்

மோல்டாவிற்கு அருகே மத்தியதரைக்கடலில் மீட்கப்பட்ட 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் சீற்றத்தால்  நிர்க்கதியாகியிருந்த நிலையில் இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர்.

எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் தலையீட்டுடன் இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள் மீன்பிடி படகில் ஏறி சுமார் நான்கு நாட்களாக புயல் சீற்றம் கொண்ட கடலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதி இரண்டு நாட்களில் அவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் உணவு என்பன கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் 8 பெண்களும், 30 சிறார்களும் அடங்குகின்றனர்.

அவர்கள் கடந்த முதலாம் திகதி லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version