Site icon Tamil News

என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால் உயிரிழக்கும் இதய நோயாளிகள்!

இதய நோய்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால் நோயாளிகள் பலர் உயிரிழந்து வருவதாக பதுளை பொது வைத்தியசாலையின், சிரேஷ்ட வைத்திய அதிகாரியும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்ககத்தின் உதவிச் செயலாளருமான பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை அறிந்து இரத்த நாளங்களை எக்ஸ்ரே படங்களின் மூலம் கண்டறிவதற்கு என்ஜியோகிராம் கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகின்றது.  ஆனால் பெருந்தோட்ட மற்றும் கிராமபுற மக்கள் பரந்து வாழும் ஊவாஇ சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இந்த கருவிகள் இல்லை.

இதனால் இந்த கருவியினூடாக செய்யப்படும் பரிசோதனைக்கா கொழும்பு, கண்டி நோக்கி செல்லவேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version