Site icon Tamil News

உலக அரசியலின் மதிப்பு மிக்க மையம்தான் ரஷ்யா – புட்டின் கருத்து!

உலக அரசியலின் மதிப்பு மிக்க மையம்தான் ரஷ்யா என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவிற்கான புதிய தூதுவர்களிடம் பேசிய அவர், எங்கள் நாடு உலக அரசியலின் இறையாண்மை மற்றும் மரியாதைக்குரிய மையமாக தொடரும் எனவும் கூறினார்.

உலக நாடுகள் புவிசார் அரசியல் மோதலை துவக்கியுள்ளது எனக் கூறிய அவர், உறவுகள் தீவிரமாக சீரழிந்து விட்டதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் வொஷிங்கடனுடனான உறவுகள் ஆழமான நெருக்கடியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version