Site icon Tamil News

உலகிலேயே முதல்முறையாக கனடா எடுத்துள்ள தீர்மானம்

உலகிலேயே முதல்முறையாக கனடா புகையிலை கட்டுப்பாட்டை குறைக்க விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட கனடா முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாக்கியங்களை அச்சிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறியுள்ளது.

“புகையிலை புற்றுநோயை உண்டாக்குகிறது” மற்றும் “ஒவ்வொரு சிகரெட்டிலும் விஷம்” ஆகியவை கனடா அச்சிட விரும்பும் இரண்டு எச்சரிக்கை வாக்கியங்கள்.

இதனை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் அச்சிட கனடா முடிவு செய்துள்ளது. இளையோர் சிகரெட் பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.

இந்த சட்டங்கள் ஜூலை 2024 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். 2026க்குள், ஒவ்வொரு சிகரெட்டிலும் மேலும் 06 எச்சரிக்கை வாக்கியங்கள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை 5 சதவீதமாக குறைக்க கனடா முயற்சித்து வருகிறது. கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் 48,000 பேர் இறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version