Site icon Tamil News

உக்ரைனை பாதுகாக்கும் முயற்சியில் பெலாரஸ்ய கெரில்லாக்கள்!

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில் உக்ரைனை பாதுகாக்கும் முயற்சில் பெலாரஸ்ய கெரில்லாக்கள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ரஷ்யா தங்களுடைய இராணுவ தளவாடங்களை பெலாரஷ் வழியாக கொண்டுசெல்கிறது. இதற்காக ரஷி;யாவில் இருந்து பெலாரஷ் நோக்கி பயணிக்கும் ரயில் ஒன்று பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் போரிடும் ரஷ்யர்களுக்கான ஆயுத விநியோகத்தை தடுக்கும் வகையில், பெலாரஸ் நாட்டின் இரயில் கடவைகளை தகர்க்கும் முயற்சியில் பெலாரஸ் கெரில்லாக்கள் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றையும் அவர்கள் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் உக்ரைனுடனான போரில் ரஷ்யா பெலாரஸை பயன்படுத்த கெரில்லா குழு இடமளிக்காது என அந்நாட்டின் ஓய்வு பெற்ற சேவையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கெரில்லா குழுவை ஒடுக்க பெலாரஷ்ய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவை பலனளிக்காமல் போனது. மனித உரிமை குழுவான வியாஸ்னாவின் கூற்றுபடி, குறைந்தபட்சம் 1575 பெலாரஷ்யர்கள் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version