Site icon Tamil News

இலங்கை IMF நிதிய உதவியைப்பெறும் செயன்முறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க சீனா இணக்கம்

இலங்கை கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  இந்த விடயத்தில்  நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டு சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கி நிதியமைச்சிடம் நிதியியல் ஒத்துழைப்பு ஆவணமொன்றை வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவிகோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அச்செயன்முறைக்கு உதவுவதாக எக்ஸிம் வங்கி நிதியமைச்சிடம் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மாவோ நிங்,

அனைத்து வர்த்தகக் கடன்வழங்குனர்களும் ஒத்தவிதத்திலான கடன்சலுகைகளை வழங்கவேண்டும் என்றும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பல்தரப்புக்கடன்வழங்குனர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version